சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

சிவன் தொலைக்காட்சி

சிவன் தொலைக்காட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அண்டவெளிதனில் அம்பலத்தில் ஆடும் ஐயன் இப்புவியினில் பொன்னம்பலத்தில் ஆடல் புரிகின்றான். அவன்தன் ஆட்டத்தினால் இவ்வையகம் இயங்குகின்றது. எல்லா இயக்கங்களுக்கும் காரணமான எம்பெருமான் பாதம் பணிந்து சிவன் தொலைக்காட்சியின் தோற்றம்பற்றி எழுத முயல்கிறோம்.

.அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேர் இன்பத்து அருள் வெளிதானே.
– திருமந்திரம்


என்ற ஐயன் திருமூலர் வாக்கிற்கிணங்க சிவனே உலகமாகவும்ää அனைத்துமாக பேரின்ப அண்டவெளியாகி இருக்கின்றார்;. அச்சுத்தவெளியாகிய சிவனை எம் அலையும் மனதில் கொண்டு வந்து நிறுத்துவதற்கும்ää சிந்திப்பதற்கு உருவானதே பதினட்டுபுராணங்கள்ää ஆறுபத்திமூன்று நாயன்மார்கள் வரலாறுகள்ää சிவன் புகழ்பாடும் திருமுறைகள்ää பக்திப்பாடல்கள் என்பன.

இப்புவிதனில் நவீன தொழில்நுட்பமானது நாளுக்குநாள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கின்றது. அவ்வளர்ச்சியினை நாமும் எமது ஆன்மிக விடயங்களுக்கு உபயோகித்து எங்கள் ஆலயம் தொடர்பான விபரங்கள்ää சைவசமய சிந்தனைகள் போற்றவற்றினை உலகெங்கும் பரந்துவாழும் எம்மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் முகமாக முதல்முதலாக அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் ளiஎயமெழஎடை.உh எனும் இணையத்தளம் உருவாக்கப்பெற்று 05.11.2005 அன்றுமுதல் அடியார்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இவ்விணையத்தளம் மூலம் அடியார்கள் திருக்கோவில் பூசை நேரங்கள்ää விரதநாட்கள்ää ஆன்மீகச் சிந்தனைகள்ää பெரியார்களின் சொற்பொழிவுகள்ää திருக்கோவில்களின் வரலாறுää ஆன்மீகக் கதைகள்ää எங்கள் திருக்கோவில் விரதகால ஒளிப்படங்கள் போன்றவற்றைப் பார்வையிடலாம்.
திருவருளின் எண்ணக்கூற்றிற்கு அமைவாக சைவசமயமத்திற்கான வானொலியினை உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவே பக்திமலர்கள் எனும் இணையவானொலி உருவாகிற்று. 14.02.2007 அன்று எம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட பக்தி மலர்கள் இணைய வானொலியில் பக்திப் பாடல்கள்ää திருமுறைகள்ää ஆன்மீகச் சிந்தனைகள்ää வாத்திய இசைகள் என்பன 24 மணிநேரமும் வானலைகளில் உலகம் முழுதும் கேட்கக்கூடியதாக அமையப்பெற்றது. இவ்வானொலிமூலம் 2007ம் ஆண்டு வருடாந்த பெருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்து சொற்பொழிவாளர் திருவாளர். ஆரங்க இராமலிங்கம் ஐயா அவர்களின் தொடர் சொற்பொழிவினை நேரலையாக உலகம் முழுவதும் ஒலிபரப்பினோம். எமது இச்செயற்பாட்டிற்கு பல அடியர்கள் தங்கள் நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்கள். தற்போது பக்திமலர்கள் எனும் வானொலியானது சிவன் குஆ எனும் பெயர்மாற்றத்துடன் தனது சேவையினை உலகம்வாழ் சைவ அன்பர்களுக்கு 24 மணிநேரமும் வழங்கிக்கொண்டிருக்கின்றது.


சிவன் ஆலய வானொலி ஆரம்பித்த காலம்முதல் சைவசமயத்திற்கான தொலைக்காட்சி சேவையினை ஆரம்பிக்கவேண்டும் என்ற அவா மனதிற் தோன்றிற்று. அந்நாள்முதல் தொலைக்காட்சி தொடர்பான தேடல் ஆரம்பமானது. இணையத் தொலைக்காட்சி தொடர்பான எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத நாம் பல அன்பர்களிடம் இதுவிடயமாகக் கேட்டறிந்து கொண்டோம். பல சிரமங்களுக்கு மத்தியில் சிவனருளால் 2010ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டன்று (15.04.2010) சிவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை சிவன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்தது. ஒரு மடிக்கணணியுடன்ää றுநடி உழஅ ஊடாக ஆரம்பமான எமது நேரலை சிலமாதங்களில் நடைபெற்ற சிவன் ஆலய பெருந்திருவிழாவினை ஊயஅநசய வின் உதவியுடன் நேரலையாகக் காண்பித்தது. இப்பூசை வழிபாடுகளை இணைய உதவியுடன் தாயக மக்களும் கண்டுவழிபட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்கள்.

சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டில் நாம் நித்தம் தரிசித்த திருக்கோவில்களின் விசேட விழாக்களை நேரலையாகக் காண்பிக்குமிடத்து புலம்பெயர்ந்துவாழும் ஈழமக்கள் மகிழ்வடைவதுடன் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் ஆலயம் தொடர்பான விபரங்களையும் ஒழுங்குகளையும் தெரிவிக்கமுடியும் என்ற நோக்குடன் தாயக விழாக்களையும் நேரலையாக ஒளிபரப்ப ஒழுங்குகளை மேற்கொண்டோம். இதன் பரீட்சார்த்த ஒளிபரப்பாக 2010ம் ஆண்டு இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் திருக்கோவிலில் நடைபெற்ற கஜமுகசங்கார நிகழ்வினை ஒளிபரப்பி இறையருளையும்ää அடியார்களின் பாராட்டையும் பெற்றோம். தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில ஆலயங்களின் நிகழ்வுகளை நேரலையாகவும்ää தமிழகத்திலுள்ள சில கோவில்களின் நிகழ்வுகளை காட்சியாகவும் பதிவுசெய்து ஒளிபரப்பியிருந்தோம்.
எவ்விடயமாயினும் சிவன் ஆலய தொண்டர்களின் நினைவுகள் அனைத்தும் தாயகம்ää தாயக மக்கள் தொடர்பானதாகவே இருக்கும். இதற்கு சிவன் தொலைக்காட்சி விதிவிலக்கானதல்ல. தாயகத்தில் சில மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி எமது தொலைக்காட்சிக்கான நிகழ்வுகளைத் தயாரிக்கவும்ää தாயகத்திலுள்ள கோவில்களுடன் இலகுவானமுறையில் தொடர்புகளைப் பேணவும் „சிவன் நிகழ்ப்பட மையம்“ தாயகத்தில் 00.01.2013 அன்று தற்காலத்தில் வாழ்த்து மறைந்த பெரியண்ணா என்று அழைக்கப்படும் சித்தரினாலும்ää சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழ் அர்ச்சுனையர் சிவரூசி சசிக்குமார் ஐயாவின் தமிழ் வேள்வியினாலும் திறந்துவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுன்னாக நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட எமது நிறுவனத்தின் தொடர்புகளால் தாயகத்திலுள்ள பல திருக்கோவில்களின் விழாக்களை நேரலையாகவும்ää கானொளியாக பதிவுசெய்தும் எமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதுடன் பதிவுப்பிரதியினை அத்திருக்கோவிலுக்கான ஆவணமாகவும் வழங்கிவந்தோம்.


தற்போது காங்கேசன்துறை வீதி (தியேட்டர் முன்பாக)ää இணுவிலில் சிவன் தொலைக்னாட்சி நிலயம் அமைந்துள்ள எமது நிலையம் சிவனருளால் பல சேவைகளை ஆற்றிவருகின்றது. இலங்கை அரசின் சட்டவரன்முறைக்கு அமைவாக இணையத் தொலைக்காட்சியாக பதிவுசெய்யப்பட்டுள்ள சிவன் தொலைக்காட்சி பலரிற்கு வேலைவாய்ப்பினை வழங்கி இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள திருக்கோவில்களின் நிகழ்வுகளை நேரலையாகவும்ää கானொளியாகவும் பதிவுசெய்து ஒளிபரப்பி சைவசமயத்திற்கான தனது சேவையினை ஆற்றிவருகின்றது.


தற்போது அதிநவீன தொழல்நுட்பத் தரத்துடன் (ர்iபா னுநகinவைழைn) ஒளிபரப்படும் எமது தொலைக்காட்சியினை லைகாää சாலைää சித்திரம்ää மற்றும் இணையத்தளத் தொலைக்காட்சிகளிலும் பார்வையிடலாம்.
உலகிலேயே முதன்முதலில் இணையம்ää வானொலிää தொலைக்காட்சி ஆகிய மூன்றையும் தன்னகத்தே கொண்ட சங்கமாக சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அமையப்பெற்றிருப்பது எம்மையாளும் ஆடல் அரசன் பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாத பரமேச்சரனது கருணையே.
எமது வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வர்த்தகப் பெருமக்களுக்கும்ää சந்தாதாரருக்கும் திருக்கோவில் உபயகார்கள்;ää தொண்டர்கள்ää இரவு பகல் என்று பார்க்காமல் பணியாற்றும் நிறுவன ஊழியர்கள்ää தொழில் நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் எமது கோடான கோடி நன்றியினைத் தெரிவிக்கிறேன். நாளுக்குநாள் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பத்துடன் சிவன் தொலைக்காட்சியும் மேன் மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல சிவன்பாதம் பணிந்து அடியார்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் வேண்டி வணங்குகிறேன்.

பூவேந்திரநாதன் பரணீதரன்
உப தலைவர்
சைவத் தமிழ்ச் சங்கம்
சிவன் தொலைக்காட்சி இணைப்பாளர்

 

🌐 மொழியை மாற்ற »