|
அன்பார்ந்த சிவனடியார்களே வணக்கம்!
கீழேயுள்ள சேக்கிழாரினால் பாடப்பெற்ற பெரியபுராணப்பாடலைப் படியுங்கள்.
மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வரு“ கென உரைப்பார்.
அரிதிலும் அரிதான மானிடப்பிறப்பிலே நாம் சைவத்தமிழர்களாக பிறந்தது அரிய மானிட சந்தர்ப்பமாகும். இப்பிறப்பை எடுத்துள்ள நாம் உலகிலே இன்புற்று வாழ்வதற்கேயாகும். அப்படியாயின் வாழ்விற்கு மார்க்கம் ஒன்று தேவை, மார்க்கம் இல்லாத வாழ்வு மானிடவாழ்வாக இருக்க மாட்டாது. எனவே நீங்கள் எல்லோரும் உலகிற்கொருவனும், தலைவனுமாகவுள்ள சிவபெருமானை பின்பற்றும் சைவசமய மார்க்கத்தில் வாழ்கின்றீர்கள். இந்த மார்க்கத்தில் வாழ்கின்றபோது பலவழிபாட்டு முறைகளை ஆன்றோர்கள் வகுத்துள்ளார்கள். அதன் வழிமுறையிலே சில:- கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் வேண்டும், அங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களிலே பங்கேற்க (உபயம் செய்தல்) வேண்டும். இவை எல்லோரது வாழ்க்கை முறைகளிலும் ஒன்றுசேர மாட்டாது காரணம் திருவிழாவாக இருந்தால் 10, 12 தினங்கள் மட்டுமே நடைபெறுவது பொதுவழக்கு. இதில் பங்கேற்க முடியாதவர்கள் ஏனைய விரத உபயங்களிலும் அல்லது வாராந்த வெள்ளிக்கிழமை, செவ்வாய், ஞாயிறு, பிரதோசம் இப்படிப்பல விரததினங்களில் ஒன்றையாவது உபயமாக மேற்கொள்ளலாம். மேலே கூறப்பட்ட கருத்துக்களைக்கொண்டு சிவனடியார்களாகிய நீங்கள் உங்கள் பெயரால் அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரால் இல்லையேல் அவர்களது பிறந்த நாளுக்கோ, திருமண நாளை முன்னிட்டு அல்லது அதையொட்டிய நாளில் சிவபெருமானின் ஆலயத்தில் (சு10ரிச் அருள்மிகு சிவன் கோவிலில்) உபயத்தினை நடாத்தி நீங்கள் மனச்சாந்தி அடைவதுடன், ஏனையவர்களுடன் சேர்ந்து இறைவழிபாட்டில் உங்களை ஈடுபடுத்தி மென்மேலும் நற்பலனை அடையலாம். ஆகவே இதில் கூறியவற்றிற்கு இணங்க சூரிச் சிவன் கோவிலில் உபயத்தினை மேற்கொள்ள விரும்புகின்ற சிவனடியார்கள் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
|