 |
 |
|
|
| |
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
சிவனடியார்களே! மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்
|
|
 |
|
|
 |
|
 |
| |
 |
|
 |
|

| |
| | | ஸ்ரீ விரோதி வருட மகாசிவராத்திரி விரதம் ஏன் ஐரோப்பாவில் தை மாதம் 29ம் நாள்(11.02.2010) வியாழக்கிழமை வருகின்றது?
சிவனடியார்களே!
மாகமாதத்தில் வரும் அபரபட்ச சதுர்த்தசி திதியானது கூடிய அளவு வியாபித்திருக்கின்ற இராத்திரியே மகாசிவராத்திரி தினமென்பது சாஸ்த்திரங்கள் கூறும் விதி. இதுபற்றி காமிகாகமத்தில் சிவராத்திரி பூஜா படலத்திலும், கந்தபுராணத்திலும், குமாரதந்திரத்தில் மாகபூஜா விதியிலும் மற்றும் பல சாஸ்த்திர நூல்களிலும் விரிவாக கூறப்பட்டிருக்கின்றது. இனி நாம் மாகமாதம் என்றால் என்ன? என்பதை பார்ப்போம். தை மாதப்பிறப்பிற்குப் பிறகு வருகின்ற அமாவாசை கழிந்த பிரதமை திதி முதலாக மாசி மாதப்பிறப்பிற்குப் பின் வருகின்ற அமாவாசை இறுதியாக உள்ள காலமே மாகமாதமாகும். இதன்படி இவ்வருடத்தில் (16.01.2010) சனிக்கிழமை முதல் (13.02.2010) சனிக்கிழமை வரையுள்ள காலமே மாகமாசமாகும். மாகமாத அபர பட்ச சதுர்த்தசி திதியானது கூடியளவு வியாபித்திருக்கின்ற இராத்திரியானது ஐரோப்பாவில் இவ்வருடம் 29ம் நாள் (11.02.2010) வியாழக்கிழமையே! ஆகையால் அன்றையதினமே மகாசிவராத்திரி தினமாகும். இதுபோலவே புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி விரதம் மற்றும் ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி விரதம் போன்றவை சில வருடங்களில் மாறுபட்டு வருவதை நாம் அறிவோம். இவ்வாறே மகாசிவராத்திரி விரத தினமும் இம்முறை தை மாதத்தில் வருகின்றது. அது ஏன் தை மாதத்தில் வருகின்றது என்று அடியார்களின் மனதில் சஞ்சலப்படாது. எல்லா விதமான புண்;ணியங்களையும், சுகங்களையும் தரக்கூடிய சிவராத்திரி விரதத்தை 11.02.2010 வியாழக்கிமை அன்று அனுஷ்டித்து சிவனருள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகின்றோம்.
(மூலம் வாக்கிய பஞ்சாங்கம் இ.சி.இரகுநாதையர் கொக்குவில்)
|
மகா சிவராத்திரி விரதம்!
மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி
|
|
 |