Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 

சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

ஒரு பொருளை தூய்மை அல்லது புனிதப்படுத்தும் வழிமுறைகளுக்கு சடங்குகள் என்று பெயர்.

புனிதப்படுத்துவதால், இரு வகை நன்மைகள் உள்ளன. எந்தப் பொருள் புனிதப்படுத்தப்படுகிறதோ... அதன் புனிதத்தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக... அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.
சடங்குகளின் பயன்கள்... கண்களுக்கு புலனாகும் படியும்... புலனாகாதபடியும் அமையலாம்.
உதாரணமாக... ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்... அதிலுள்ள அழுக்குகள் மறைந்து... பிரகாசத்தையும் பெறும். இது கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு.
ஒரு பொருள்... மந்திரம் ஏற்றப்பட்ட நீரால் புனிதம் பெறும். இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்து கொள்ள முடியாது. மாறாக... உணர முடியும்.
சில குறிப்பிடப்பட்ட சடங்குகளின் மூலம் மனிதன்... தன் உடம்பை புனிதப்படுத்திக் கொள்ள தர்மசாஸ்திரங்கள் கூறியுள்ளன. முக்கியமாக 16 வகையான சடங்குகளை சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன. இந்த சடங்குகளை கடைப்பிடிப்பதன் மூலம்... மனிதன் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளலாம். சாஸ்திரங்களில் முழு நம்பிக்கை கொண்டவர்கள்... இச் சடங்குகள் மூலம் பயன் பெறலாம்.
ஒவ்வொரு சடங்குகளுக்கும்... ஒவ்வொரு வயது அல்லது காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரங்கள் நிர்ணயித்துள்ள கால அளவில் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றினால்... பலன்கள் மிகுதியாக அமையும்.
சில சடங்குகளைச் செய்வதற்கு... குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் போனால்... அவைகளைச் செய்ய... சில மாற்று கால நேரத்தையும் சாஸ்திரங்கள் அனுமதித்துள்ளன.
ஒவ்வொருவரும் தர்ம சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்ற சடங்குகளை குறிப்பிட்டபடி செய்து... அதன் நற்பயன்களை பெற்று உய்வோமாக.

 

Copyrights : Sivankovil.ch