 |
 |
|
|
| |
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
சிவனடியார்களே! மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்
|
|
 |
|
|
 |
|
 |
| |
 |
|
 |
|
ஒரு பெண் போதித்த ஞானம் |
|
 |
|
வேட்டையாடப் போயிருக்கும்போது ஒரு நாள் ஓர் இளவரசன் கங்கைக் கரையில் அழகிய ஓர் இளவரசியைக் கண்டான். அவ்விளவரசியின் மனம் ஆன்மீக மார்க்கத்தில் ஊன்றியிருந்தது. அவள் அநேக வேதாந்தப் புத்தகங்களை நன்றாக கற்றறிந்து தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் ஆன்மாவின் மேல் ஆழ்ந்த தியானம் பழகிக் கொண்டிருந்தாள். இளவரசன் அவளை நெருங்கி, தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டான். அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள். ஆனால் இளவரசன் அவளை மறுபடியும் மறுபடியும் அநேக விதங்களில் கெஞ்சிக் கேட்டான். "பத்து நாட்களுக்குப் பிறகு என்னுடைய இருப்பிடத்தில் என்னை வந்து பாருங்கள். நான் உங்களை மணம் புரிந்து கொள்கிறேன்'' என்று அவள் கடைசியாகச் சொன்னாள். இளவரசனும் ஒரு வேதாந்த மாணவன்தான். ஆனால் அவனுக்கு உண்மையான ஆழ்ந்த வைராக்கியம் இல்லை. தூக்கமின்றி இரவுகளை கழித்து விட்டு, பத்தாம் நாள் காலை அவன் மிகவும் ஆவலோடு இளவரசியின் அரண்மனைக்குச் சென்றான். கல்யாண பந்தத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த இளம் இளவரசி முன்னதாகவே ஓர் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் பத்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் தினமும் பேதிக்குச் சாப்பிட்டு, பத்து வெவ்வேறு எனாமல் பாத்திரங்களில் மலத்தைச் சேகரித்து அவற்றுக்கு மூன்று முதல் பத்து வரை இலக்கமிட்டு ஒரு பெரிய அறையில் அழகான பட்டுத் துணிகள் போட்டு மூடி வரிசையாக வைத்து விட்டாள். இப்பொழுது பார்ப்பதற்கு அவள் வெறும் எலும்பும் தோலுமாகக் காணப்பட்டாள். அவள் கண்கள் செருகிக் கிடந்தன. உடம்பில் சக்தியின்றிப் படுக்கையில் படுத்துக் கிடந்தாள். இளவரசன் மிகவும் சந்தோஷத்தோடு அவளைச் சந்திக்க வந்தான். இளவரசி படுத்துக் கொண்டிருந்த அறைக்கு, அவனை வேலைக்காரி அழைத்துச் சென்றாள். அவனால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. "அந்த அழகிய இளம் மங்கை எங்கே? நான் அன்று சந்தித்த மங்கை இவள் இல்லை'' என்று இளவரசன் வேலைக்காரியைக் கேட்டான். "அன்பார்ந்த இளவரசரே, அதே மங்கைதான் நான். என்னுடைய அழகை மிகவும் பத்திரமாக அந்த அறையில் சேகரித்து வைத்திருக்கிறேன். தயவு செய்து என்னுடன் வந்து அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அழகைப் பாருங்கள். இப்பொழுது என்னுடன் வாருங்கள். நான் அதை உங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று உடனே இளவரசி பதிலளித்தாள். இப்படிச் சொல்லிக் கொண்டே இளவரசனை அந்த அறைக்கு அழைத்துச் சென்று, பட்டுத் துணியை அகற்றி, தன் அழகைப் பார்த்துக் கொள்ளும்படிச் சொன்னாள். மேலும், "இது தான் என்றுடைய தோல், சதை இவற்றின் அழகு'' என்று சொன்னாள். இளவரசன் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டான். அவளிடத்தில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவளைத் தன் தாயாகப் பாவித்து அவள் பாதங்களில் விழுந்து வணங்கி, இளவரசனுக்குரிய தன் ஆடைகளை எறிந்து விட்டு, காட்டிற்குச் சென்று விட்டான். இப்பொழுது அவனுடைய இதயம் தீவிர வைராக்கியத்தில் நிறைந்திருந்தது. ஒரு சாதுவை அடைந்து, அவரிடமிருந்து போதனைகள் பெற்றுக் கொண்டு கடுமையான தியானம் செய்து ஆத்ம ஞானம் பெற்றான்.
ஸ்ரீசுவாமி சிவானந்தர்.
|
|
|
|
|
| |
|
|
|
|
 |