|
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"
உலகம் முழுவதும் வியாபித்துள்ள பரம்பொருளை கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தை நாம் ஆலயம் அமைத்து விக்கிரகங்களை பிரதிஷ்டைசெய்து வழிபடுவதே இந்து சமயத்தவர்களின் குறிப்பாக சைவ சமயத்தவர்களின் வழிபாட்டுமுறையாகும். இந்த முறையிலே புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவருகின்ற சைவசமய மக்களால் 26.08.1994 வெள்ளிக்கிழமை சூரிச் சிவனாலயம் Volkhaus மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டதே. இவ்வாலயம் தொடர்ந்து பிரதி வெள்ளி தோறும் குறித்த மண்டபத்தில் வழிபாடுகளை நடாத்தி வந்தது. இவ்வேளையில் ஆலய நிர்வாகத்தினரும (சைவத் தமிழ்ச் சங்கம்) சிவனடியார்களுமாக சிவபெருமானுக்கு நிரந்தரமான இடம் தேவை என்ற பெரு விருப்பத்தோடு Wehntaler Str. 293, 8046 Zuerich. என்ற முகவரியில் 14.01.1995 என்ற திகதியில் அங்குரார்ப்பன விழாவினை நடாத்தி தொடர்ச்சியாக வழிபாடுகள் நடாத்தப்பட்டு 16.07.1995 ஞாயிற்றுக்கிழமை பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்று மண்டல பூர்த்தியும் சிறப்புடன் நடைபெற்றது. தொடர்ந்து வருடந்தோறும் ஆனிமாத உத்தர நட்சத்திரத்தைத் தீர்த்தமாக (ஆனிஉத்தரம்) வைத்து முதல் பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. அதேபோன்று ஏனைய வழிபாடுகள், விரதங்கள் வருடாவருடம் தைப்பொங்கல், சிவராத்திரி, சித்திரா பூரணைவிரதம், வைகாசிவிசாகம், வரலட்சுமிவிரதம், ஆவணி விநாயகர்சதுர்த்தி, புரட்டாதி சனீஸ்வரவிரதம், நவராத்திரிவிரதம், கேதாரகௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், அன்னாபிஷேகம், கார்த்திகைவிளக்கீடு, மாவீரர்வழிபாடு, சிவவிளக்கேற்றல், விநாயகர் பெருங்கதை முடிவு, திருவெம்பாவை பத்துநாட்களும் திருவெம்பாவை ஓதப்பட்டு தினமும் மணிவாசகப்பெருமான் வீதிவலம் வருவதோடு 9ம்நாள் ஆனந்தமா நடராசப்பெருமானும், சிவகாமிஅம்பாளும் தேரில் பவனிவந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதக்காட்சியும் மறுநாள் ஆர்த்திரா தரிசனமும் திருவாதிரை நட்சத்திரத்தில் இடம்பெறுவது இவ்வாலய வழிபாடுகளில் முக்கியமானவையாகும்.
'சைவத் தமிழ்ச் சங்கம்" இந்த ஆலயத்தை பரிபாலனம் செய்து வருகின்ற பரிபாலன சபையின் பெயரே சைவத் தமிழ்ச் சங்கம் ஆகும். இந்த ஆலயபரிபாலனசபை ஆலயபரிபாலனத்தோடு மட்டும் நின்றுவிடாது சைவமும், தமிழும் தமது இருகண்களாகக்கொண்டு சைவத்திற்காக புரட்டாதிமாதத்தில் சுவிற்சர்லாந்து நாடு தழுவிய முறையில் அனைத்து சைவசமய மாணவர்களுக்கு தேவார, திருவாசக, பெரியபுராண, கந்தபுராண, திருப்புகழ், கொன்றைவேந்தன், ஆத்திசூடி மனனப்போட்டிகளும், பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றுவருகின்றது. இப்போட்டிகளில் வருடந்தோறும் பலநூற்றுக்கணக்கான மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றி கலைவாணிவிழாவின்போது பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும், முதல் மூன்று இடங்களைப்பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இப்போட்டிக்கு முதல்முறை ஆத்மீகவள்ளல் ஆத்தஜோதி அமரர் நா. முத்தையா அவர்கள் நடுநிலைமை தவறாது நடுவராக போட்டியை நடாத்தினார். அதனைத்தொடர்ந்து சுவிற்சர்லாந்திலுள்ள ஆசிரிய
|