Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 
சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

 

ஆன்மீக கேள்வி பதில்கள்

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?

எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாம்
சிலர் ""மனித வாழ்வுக்கு இறைவணக்கம் தேவையா? நாங்கள் எல்லாம் கடவுளை வணங்குவதே இல்லையே! ஆனாலும் நன்றாகத்தானே இருக்கிறோம்'' என நாத்திகம் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ, "" ஒரு கல்லை வைத்துக் கொண்டு அதை "விக்ரகம்' என்று சொல்லி கடவுளாக நினைத்து வணங்குகிறீர்களே, இது அறியாமை இல்லையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நாம் மனதில் முழு நம்பிக்கையுடன் இறைவனாக எண்ணி வழிபடும் கல் சிலையை "விக்ரகம்' என்கிறோம். "விக்ரகம்' என்றால் "இறைவன் குடியிருக்கும் இடம்' என்று பொருள். "கிரகம்' என்றால் வீடு அல்லது இருப்பிடம் என்றும், "வி' என்ற சொல்லுக்கு "மேன்மை' என்றும் பொருள். மேன்மையான இறைவன் குடியிருப்பதால் கல் சிலையை, விக்ரகம் என்கிறோம்.
இறைவன் கல்லாக இருந்தாலும், படமாக வரையப்பட்டிருந்தாலும் அருள் புரிவதில் நிகரற்றவனாக இருக்கிறான்.
நாத்திகம் பேசுபவர்கள் உட்பட எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாத அருளை தருகிறான். சில நேரங்களில் நாம் துன்பங்களால் அவதிப்படுகிறோம். இத்துன்பத்தை தாங்க முடியாதவர்கள், ""என்ன! இறைவன் நம்மை இப்படி சோதிக்கிறானே,'' என புலம்புகிறார்கள். இந்த சோதனையை இறைவன் நமக்குத் தருவதில்லை. அறியாமையால் நாம்தான் நமக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புரிந்துகொண்டு இறைவனை எந்த வடிவத்தில் இருந்தாலும் வணங்கலாம். இதனால் அவனருள் என்றும் குறைவில்லாமல் கிடைக்கும்.


வாரியார்


 * நல்ல நோக்கத்துடன் நாம் செய்யும் செயல்களுக்கு உடனடியாக பலன் கிடைப்பதில்லை. சில சமயங்களில் சிரமமும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே கடவுள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

நம்முடைய வாழ்க்கை ஒரு பெரிய தொடர்ச்சியின் ஒரு சிறு பகுதி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிறவிக்கு முன்பும், பிறவிகள் பல இருந்ததுண்டு. ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கும்போது, அதில் சொல்லப்படும் விஷயங்களை தொடர்ச்சியாக புரிந்துகொண்டு வரவேண்டும். அப்போதுதான் நாம் படிக்கும் பகுதியை சரியாக உணர்ந்து தெரிந்துகொள்ள முடியும். அதிலுள்ள ஏதோ ஒரு பக்கம் நம் மனதிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த புத்தகத்தையே து

Copyrights : Sivankovil.ch