Skip to content Skip to footer

தைப் பொங்கல், பொதுக் கூட்டம்.

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள் கைக்கூடியுள்ளது. அடியார்கள் தைத்திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். தைப்பொங்கல் திருநாளன்று.. • காலை 09.00…

LEARN MORE

முகமாலை சிவபுரம் திறப்புவிழா

சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது.முதியோர்கள் பேணலகம் ,பொழுதுபோக்கு அம்சங்கள்,வழிபாட்டு இடங்கள்,பிரமாண்ட உணவுச்சாலை,அரைக்கும் ஆலை,ஆலயம்,நூலகம் என தொடரும் அற்புதமான வசதிகள் பலவற்றை கொண்ட இவ்விடம் இன்று மிக நீண்டகால அன்பே சிவத்தின் மிகக் காத்திரமான உழைப்பால் இன்று வெற்றி கண்டது.சிவபுர வளாகம் என்னும் நாமம் இடபட்ட இவ் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த பார்வதி பரமேஸ்வர்…

LEARN MORE

அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022.

சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022. சிவனடியார்களே நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல் ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து, எம்பிரான் பேரருள் பெறுவதோடு எமது தாயக விடிவிற்காக எம்பெருமான் அருள் பாலிக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

LEARN MORE

அற்றார் அழிபசி தீர்த்தல் 2022

சைவத் த தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம்  நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு இவ்வருடம் 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இதில் 150மேற்பட்ட பரம்பரிய சைவ உணவு வகைகள் காட்ச்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட இருக்கின்றதுஇ அத்துடன் இசை நிகழ்வுகள் கவிஅரங்கு என:பவற:றுடன் பல நிகழ்வுகளும். இதன் மூலம் பெறப்படும் நிதி தாயகத்தில் அமையப்பெறும் சிவபுரத்திற்கு பயன்படுத்தப்படும்.

LEARN MORE

சித்திரை புத்தாண்டு

சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது . நாமும் எம் தாயக மக்களும் தற்போதுள்ள அசாதாரண சூழல் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற்றுய்யும் வேண்டிக் கொள்கின்றோம் . விஷு புண்ணிய காலம் 14.04-2022 வியாழன் அதிகாலை 0.20 முதல் 8.20…

LEARN MORE

மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022 திங்கட்கிழமை

மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022 தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன். (அப்பர் சுவாமிகள்) சிவனடியார்களே! சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான் (பிரம்மா) பெரிது, இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என அகங்காரம் கொண்டு பிரம்மா அன்னப் பறவையாகவும்ää விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின் (சிவபெருமானின்) அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த…

LEARN MORE

தைப்பொங்கல்

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான பிலவ வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2053 தைத்திங்கள் (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயணம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இறையருள் கைகூடியுள்ளது. அடியார்கள் திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.  தைப்பொங்கல் திருநாளன்று.. 1. காலை…

LEARN MORE

திருவெம்பாவை விரதம் 2021

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் கார்த்திகைத் தி;ங்கள் 26ம் நாள் (11.12.2021) சனிக்கிழமை முதல் மார்கழித் திங்கள் 05ம் நாள் (20.12.2021) திங்கட்கிழமைவரை திருவெம்பாவைப் பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத நாட்களில் வருகைதந்து எம்பெருமானுக்கு நடைபெறும் பூசைகளில் பங்குகொண்டும் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியும் எம்பெருமானின் அருள்பெற்று மகிழ்வோடு வாழ்வதோடு தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளும் மகிழ்வுற்றிருக்க சிவனருள் வேண்டி சிவன்தாள் பணிந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம். திருவெம்பாவை விரத நாட்களில் மாலை 17:30…

LEARN MORE

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 19:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2023. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »