மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(அப்பர் சுவாமிகள்)
சிவனடியார்களே!
சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான் (பிரம்மா) பெரிது, இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என அகங்காரம் கொண்டு பிரம்மா அன்னப் பறவையாகவும்ää விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின் (சிவபெருமானின்) அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த…