சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான பிலவ வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2053 தைத்திங்கள் (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயணம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இறையருள் கைகூடியுள்ளது. அடியார்கள் திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். தைப்பொங்கல் திருநாளன்று.. 1. காலை…
07
டிசம்பர்

சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் கார்த்திகைத் தி;ங்கள் 26ம் நாள் (11.12.2021) சனிக்கிழமை முதல் மார்கழித் திங்கள் 05ம் நாள் (20.12.2021) திங்கட்கிழமைவரை திருவெம்பாவைப் பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத நாட்களில் வருகைதந்து எம்பெருமானுக்கு நடைபெறும் பூசைகளில் பங்குகொண்டும் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியும் எம்பெருமானின் அருள்பெற்று மகிழ்வோடு வாழ்வதோடு தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளும் மகிழ்வுற்றிருக்க சிவனருள் வேண்டி சிவன்தாள் பணிந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.
திருவெம்பாவை விரத நாட்களில்
மாலை 17:30…