Skip to content Skip to footer

கேதாரகௌரிவிரதம், தீபாவளித்திருநாள்.

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவவருடம்; புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை கேதார கௌரி விரதம் ஆரம்பித்து ஐப்பசித்திங்கள் 18ம் நாள் (04.11.2021)வியாழக்கிழமை வரை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து அம்பாளுக்கு நடைபெறும் அபிசேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு பேரருள் பெற்றுய்வதோடு எமது தாயக உறவுகளும் இன்புற்றிருக்க பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். கேதார கௌரி விரத தினங்களில் மாலை - 17.00 மணிக்கு - அபிசேகம் மாலை…

நவராத்திரி விரதம்

சிவனடியார்;களே! நிகழும் மங்களகரமான பிலவ வருடம் புரட்டாதித்திங்கள் 21ம் நாள் (07.10.2021) வியாழக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பித்து புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை விஜயதசமி வரை நவராத்திரி பூசை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து துர்க்கை, இலச்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களுக்கு நடைபெறும் அபிஷேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு, பேரருள் பெற்றுய்வதோடு, எமது தாயக உறவுகள் இன்புற்று வாழவும்; பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். நவராத்திரி விரதநாட்களில் மாலை…

சனீஸ்வர விரதம் 18.09.2021 – 16.10.2021

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அவருக்கு உகந்தவை. இத்தினங்களில் அடியார்கள் விரதமிருந்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை தீபமேற்றி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளுச் சாதம் நைவேதனம் செய்து, சிவவழிபாடு செய்து வர சனீஸ்வர தோஷம் நீங்கப்பெற்று…

விநாயகர் சதுர்த்திவிரதம் – 10.09.2021 வெள்ளிக்கிழமை

'திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை" சிவனடியார்களே! விக்கினங்கள் அனைத்தையும் தீர்த்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததுவும்ää அனைத்து நலன்களையும் தரக்கூடியதுமாகிய விநாயக சதுர்த்தி விரதம் நிகழும் மங்களகரமான பிலவ வருடம், திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆவணித் திங்கள் 25ம் நாள் (10.09.2021) வெள்ளிக்;கிழமை வருகின்றது. அன்றைய தினம் எமதாலயத்தில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேகம், பூசை, திருவிழா என்பனவெல்லாம் வெகு சிறப்பாக நடைபெற…

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “

"வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் " interleo garage உரிமையாளரும் தொழிலதிபருமான தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்)அவர்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசசெயலக பிரிவில் காட்டு கிராமமான கட்டுமுறிவில் 5 குடும்பங்களிற்கு முதல் கட்டமாக வீடுகள் அமைத்து கொடுக்கபட இருக்கின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு 20.08.2021 வெள்ளிக்கிழமை நடைபெறும்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் 20.08.2021 சிவனடியார்களே! அழகிய கிளாட்புறூக் பதியில் கோவில் கொண்டு வேண்டும் அடியார்களின் துயர் நீக்கி பேரருள் பாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதபரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் அனைத்து நலன்களையும் அருளி அடியார்கள் வேண்டும் வரங்களையெல்லாம் தரக்கூடியதுமான வரலட்சுமி விரதம் நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் ஆவணித்திங்கள் 4ம் நாள் (20.08.2021) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கைக்கூடியுள்ளது. இவ்விரத தினத்தன்று அடியார்கள்…

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.   …

ஆடியமாவாசை விரதம், ஆடிப்பூர விரதம்

.ஆடியமாவாசை விரதம் - 08.08.2021 ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாகஇ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது. ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து நீர் நிலைகள், ஆறு, கடல் போன்ற இடங்களில் குளித்து, பித்ருக்களை வரவேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெற்று, காக்கைக்கும் உணவு வைத்து பின்னர் சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில்…

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு . திருமதி . திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வன் பார்த்தன் பிறந்த தினத்தின் (21.07.2021) நற்சேவையாக இன்றைய நாளில் அவர்களின் அன்புக்கரம் கொண்டு வவுனியா மாவட்டத்தில் கல்மடு பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையில் வைத்து பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது கற்றல் உபகரணங்களும் மதிய…

பிலவ வருட பெருவிழா 2021

அருள்மிகு சிவன் கோவிலின் வருடாந்த பெருவிழா 09.07.2021 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கின்றது பேரிடர்காலத்தினை கருத்தில் கொண்டு நேரங்களில் மாற்றங்களுடனும் சில வரையறைகளுடன் இவ் ஆண்டு பெருவிழாவினை நடத்த இருக்கின்றோம. அடியவர்களாகிய உங்களின் புரித்துணர்வினை எதிர் பார்த்து நிற்கின்றோம்.

“மேன்மைகொள் சைவமும் தமிழும்”

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 25ம் ஆண்டினை முன்னிட்டு ஆக்கப்பட்ட "மேன்மைகொள் சைவமும் தமிழும்" என்னும் வெள்ளிவிழா மலரில் திருக் கோவில்களின் வாழ்த்துச் செய்திகளுடன் பல சைவப் பெருமக்களின் வாழ்த்துச் செய்திகள் ஆசியுரைகள், சங்கத்தின் வரலாறு, உப அமைப்புக்களின் வரலாறு, தொடக்க கால படங்கள், ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் பற்றிய தகவல்கலுடன் விரிவடைகின்றது.. "வெள்ளிவிழா சிறப்பு மலர்" முழுமையான வாசிப்பிற்கு படத்தினை அழுத்தவும். (PDF File)

தைப் பொங்கல்

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். அச்சுத்துறையிலும் வரைகலைத் துறையிலும், lorem ipsum (லோரம் இப்சம்)[p][1] என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது வடிவமைப்பின் எழுத்துரு, படிமங்கள், பக்க வடிவமைப்பு முதலிய தோற்றக்கூறுகளின் மேல் கவனத்தைக் குவிப்பதற்காக இவ்வுரை பயன்படுகிறது. சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம்…

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 18:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2021. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »