சிவனடியார்;களே!
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் புரட்டாதித்திங்கள் 21ம் நாள் (07.10.2021) வியாழக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பித்து புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை விஜயதசமி வரை நவராத்திரி பூசை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து துர்க்கை, இலச்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களுக்கு நடைபெறும் அபிஷேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு, பேரருள் பெற்றுய்வதோடு, எமது தாயக உறவுகள் இன்புற்று வாழவும்; பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
நவராத்திரி விரதநாட்களில்
மாலை – 17.00 மணிக்கு – அபிஷேகம்
மாலை – 18.00 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு – 18.30 மணிக்கு – திருக்கும்பத்திற்கு அலங்காரப்பூசை
இரவு – 19.30 மணிக்கு – இறைபிரசாதம் வழங்கப்படும்
- விஜயதசமி, வன்னி வாழைவெட்டு – 15.10.2021 வெள்ளிக்கிழமை
மாலை –16.00 மணிக்கு – அபிஷேகம்
மாலை – 17.30 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
மாலை –18.00 மணிக்கு – வசந்தமண்டப அலங்காரப்பூசை
மாலை –19.00 மணிக்கு – வன்னி வாழைவெட்டு
இரவு –19.30 மணிக்கு – வித்தியாரம்பம்
இரவு –20:00 மணிக்கு – கேதாரகௌரி விரதாரம்பம்.
குறிப்பு –வித்தியாரம்பம்; மதியம் 12.30 தொடக்கம் 13.30 வரையும், இரவு 19.30 மணி முதல் வித்தியாரம்பம் நடைபெறும்.
மழலைகளின் வித்தியாரம்பம் எமது இணையத்தொலைக்காட்சியில் நேரஞ்சல் செய்யப்படும் என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்
சுவிஸ் நாட்டு பேரிடர்கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒழுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.