Skip to content Skip to sidebar Skip to footer

சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் கார்த்திகைத் தி;ங்கள் 26ம் நாள் (11.12.2021) சனிக்கிழமை முதல் மார்கழித் திங்கள் 05ம் நாள் (20.12.2021) திங்கட்கிழமைவரை திருவெம்பாவைப் பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத நாட்களில் வருகைதந்து எம்பெருமானுக்கு நடைபெறும் பூசைகளில் பங்குகொண்டும் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியும் எம்பெருமானின் அருள்பெற்று மகிழ்வோடு வாழ்வதோடு தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளும் மகிழ்வுற்றிருக்க சிவனருள் வேண்டி சிவன்தாள் பணிந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

திருவெம்பாவை விரத நாட்களில்
மாலை 17:30 மணி – மூலவர் அபிசேகம்
இரவு 18:00 மணி – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு 18:15 மணி – சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு விசேட பூசையும் திருவெம்பாவை ஓதுதலும் இடம்பெறும்.

திருவெம்பாவைத் தேர்த் திருவிழா – 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை
மாலை 17:00 மணி – மூலவர் அபிசேகம்
மாலை 17:30 மணி – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு 18:00 மணி – சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு விசேட பூசையைத் தொடர்ந்து எம்பெருமான் அழகிய தேரில் உள்வீதி வலம்வந்து அடியார்களுக்கு அருள்வார்.

திருவாதிரைத் தரிசனம் – 20.12.2021 திங்கட்கிழமை
காலை 06:30 மணி – நடராஜப் பெருமானுக்கு 108 சங்காபிசேகம்
காலை 08:00 மணி – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
காலை 08.30 மணி – வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்தவண்ணம் வீதியுலாவந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

„மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்“

பேரிடர்கால ஆலய விசேட நடைமுறைகள்:
அடியார்களின் நலன்கருதி திருக்கோவிலினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நடைமுறையினையும்ää சுவிஸ் நாட்டு பேரிடர்கால சுகாதார அறிவித்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

What's your reaction?
1Cool0Bad0Happy0Sad

Add Your Comment

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 19:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2022. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »