சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

சனீஸ்வர விரதம் 18.09.2021 – 16.10.2021

சனீஸ்வர விரதம் 18.09.2021 – 16.10.2021

எம்பெருமான் அடியார்களே!


நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அவருக்கு உகந்தவை. இத்தினங்களில் அடியார்கள் விரதமிருந்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை தீபமேற்றி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளுச் சாதம் நைவேதனம் செய்து, சிவவழிபாடு செய்து வர சனீஸ்வர தோஷம் நீங்கப்பெற்று மகிழ்வோடு வாழ்வார்கள்.
இவ்வருடம் புரட்டாதி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் வருகின்றன. 18.09.2021, 25.09.2021,  02.10.2021,  09.10.2021,  16.10.2021 ஆகிய சனிக்கிழமைகளில் சிவனாலயத்தில் விசேட சனீஸ்வர பூசை வழிபாடுகள் நடைபெற உள்ளது. இத்தினங்களில் அடியார்கள் வருகைதந்து சனீஸ்வர தோஷ பரிகாரம் செய்து சிவவழிபாடு செய்து சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்களாக.
இவ்வருடம் சனீஸ்வரப் பெருமான் மகரராசியில்; சஞ்சாரம் செய்வதால் தனுசு, மகரம், கும்ப ஆகிய இராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனிசனியும், மிதுனராசியினருக்கு அட்டமத்துச்சனியும், கடகராசியில் பிறந்தவர்களுக்கு கண்டச்சனியும், துலாம் இராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும் இடம்பெறுகின்றது.இவர்கள் சனீஸ்வர வழிபாடு செய்து எள்ளெண்ணைத் தீபம் ஏற்றி விரதம் இருப்பது சாலச்சிறந்தது.

சனீஸ்வர மகாயாகம்
இவ் விரதநாட்களில்  காலை 10.00 மணிக்கு சனீஸ்வர மகாயாகம் நடைபெறும்.  அடியார்கள் நடைபெறும் யாகத்தில் உங்கள் பெயர் நட்சத்திரங்களைக் கூறி சனிபகவானுக்கு உகந்த எள்ளு, சமித்து, பட்டு, எள்ளுச்சாதம், வெற்றிலை, பழம், கருநீலப்பூக்கள் என்பனவற்றை ஆகுதியாக வழங்கி சனீஸ்வர தோஷம் நீங்கி மகிழ்வோடு வாழ்வீர்களாக.

  • சனீஸ்வரவிரத பூசை நேரம்
    •  9:00 மணிக்கு காலை பூசை.
    •  10:00 மணிக்கு சனீஸ்வர மகாயாகம்
    •  11:30 மணிக்கு சனீஸ்வரப் பெருமானுக்கு விசேட அபிசேகமும், அடியார்கள் தோஷம் நீங்க நீர் ஊற்றுதல்.
    • 12:15 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மதியப்பூசை
    • 19:00 மணிக்கு இரவுப் பூசை

ஆலயம் காலை 9:00 மணிமுதல் இரவு 21:00 மணிவரை வழிபாட்டுக்காக திறந்து இருக்கும்.

குறிப்பு – சுவிஸ் நாட்டு பேரிடர்கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒழுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மொழியை மாற்ற »