சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவவருடம்; புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை கேதார கௌரி விரதம் ஆரம்பித்து ஐப்பசித்திங்கள் 18ம் நாள் (04.11.2021)வியாழக்கிழமை வரை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து அம்பாளுக்கு நடைபெறும் அபிசேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு பேரருள் பெற்றுய்வதோடு எமது தாயக உறவுகளும் இன்புற்றிருக்க பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
கேதார கௌரி விரத தினங்களில்
மாலை – 17.00 மணிக்கு – அபிசேகம்
மாலை – 18.00 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
மாலை – 18.30 மணிக்கு – கௌரிகும்பத்துக்கு அலங்காரப் பூசை
மாலை – 19.00 மணிக்கு – இறைபிரசாதம் வழங்கப்படும்
கேதார கௌரி விரத நிறைவுப்பூசை
(04.11.2021 வியாழக்கிழமை)
16.30 மணிக்கு அம்பாளுக்கு அபிசேகம்
18.00 மணிக்கு மூலமூர்த்திக்கு விசேடபூசை
18.30 மணிக்கு வசந்தமண்டப பூசை
19.00 மணிக்கு சந்திரசேகரப்பெருமான் திருவீதியுலாவரும் காட்சி இடம்பெறும்.
19.30 மணிக்கு அடியார்களுக்கு காப்பு வழங்கப்படும்.
குறிப்பு : பெட்டிகாப்புக்கு பதிந்த அடியார்களுக்கு மட்டும் பெட்டிக்காப்பு வழங்;கப்படும்.
தீபாவளித்திருநாள் சிறப்புப்பூசை
(03.11.2021 புதன்கிழமை)
தீபாவளி சிறப்புப்பூசை நேரம் காலை 9.00 மணி, மதியம் 12.00 மணி இரவுப்பூசை 18.00 மணி.
03.11.2021 காலை 09.00 மணி முதல் இரவு 21.00 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.
குறிப்பு: சுவிஸ் நாட்டு பேரிடர்கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒழுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.