 |
 |
|
|
| |
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
சிவனடியார்களே! மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்
|
|
 |
|
|
 |
|
 |
| |
 |
|
 |
|
| | வரம்தரும் வாசல் இறுவெட்டு வெளியீட்டுவிழா
தாயக் கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளுக்கு தமிழகத்து பிரபல இசையமைப்பாளர் இலக்கியன் அவர்களின் இசையமைப்பில் உருவான வரம்தரும் வாசல் எனும் இறுவெட்டு இன்று 04.07.2008 வெள்ளிக்கிழமையன்று சூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. சூரிச் சிவன் ஆலயத்தைப் பரிபாலனம்செய்யும் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் தயாரித்து வெளியிடப்படும் இவ் இறுவெட்டுப் பாடல்களில் சூரிச் சிவன், காரைநகர் சிவன், திருகோணமலை பத்திரகாளி அம்மன், மண்டூர் முருகன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் போன்ற ஆலயங்களின் சிறப்புக்கள்பற்றி பாடப்பட்டுள்ளது. சைவத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது வெளியீடாக வெளியிடப்படும் இவ் இறுவெட்டுவெளியீட்டுவிழா பெருமளவிலான ஆயலய பக்தர்கள் முன்னிலையில்; நடைபெற்றது.
ஆலய குருவின் ஆசியுரையும், பாடல்களை எழுதிய புதுவை இரத்தினதுரையின் ஏற்புரை தாயகத்திலிருந்து நேரடியாக தொலைபேசி வாயிலாகவும் இடம்பெற்றது. ஆய்வுரைகளினை ஊடகவியலாளர் திரு. கனகரவி அவர்களும், ஆசிரியர் கார்த்திகேசு விவேகானந்தன் அவர்களும் வழங்யிருந்ததுடன், வாழ்த்துரைகளை தாயகத்திலிருந்து வருகைதந்திருந்த யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்களும், பரப்புரைப் பொறுப்பாளர் திரு. கிருஸ்ணா அம்பலவாணர் அவர்களும் நிகழ்த்தியிருந்தார்கள்.
இவ் இறுவெட்டினை சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு. குலம் அவர்கள் வெளியிட்டுவைக்க முதற்பிரதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சுவிசிலுள்ள ஆலயப் பிரதிநிதிகள், கலை ஆசிரியர்கள், தமிழ்ப் பாடசாலைப் பொறுப்பாளர்கள், வர்த்தகர்கள் எனப் பலர் வெளியீட்டைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வினிடையே இவ்வாறான ஓர் இறுவெட்டினை சைவத் தமிழ்ச் சங்கம் வெளியிடவேண்டுமென ஊக்கம் கொடுத்த திரு. முருகேசு ரகுபாலன் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சுவிஸ்கிளைப் பொறுப்பாளரினால் பொன்னாடைபோர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.
சிவனாலய வருடாந்த மகோற்சவத்தின் முதல்நாளான வெள்ளிக்கிழமை ஆலயத்தில் நடைபெற்ற இவ் இறுவெட்டு வெளியீட்டுவிழா 20:30 மணிமுதல் 23:00 மணிவரை நடைபெற்றபோதும் அடியார்கள் பொறுமைகாத்து இறுதிவரைநின்று இறுவெட்டினைப் பெற்றுச்சென்றதானது இவ்வாறான இறுவெட்டினை பெற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும், வழங்கும் ஒத்துழைப்பினையுமே எடுத்துக்காட்டுகின்றது. |  |  |  |  |  |  |  | இறுவெட்டு விழாவிலன்று தாயத்திலிருந்து தொலைபேசி வாயிலாக புதுவை இரத்தினதுரை அவர்கள் வழங்கிய ஏற்புரை:
விழாவை தலைமையேற்றிருக்கும் தலைவர் அவர்களே! சூரிச் சைவத் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்தும் சான்றோர்களே! சூரிச் சிவன் ஆலயத்தின் அறங்காவல் சபையின் அங்கத்தவர்களே! வரம்தரும் வாசல் என்ற எனது பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீட்டுவிழாவிற்கு வருகைதந்திருக்கும் நண்பர்களே! அறிஞர்களே! கலைஞர்களே! ஊடகவியலாளர்களே! உரையாற்றவந்தும் வெளியீட்ட சம்பிரதாயங்களில் பங்கேற்க வந்திருக்கும் பெரியோர்களே! கூடியுள்ள தாய்மார்களே! பிள்ளைகளே! புலம்பெயர்ந்த என் உயிரினும் மேலான உறவுகளே! உங்கள் அனைவரையும் காற்றலையின்மீதேறி வந்து கைகொடுத்து வரவேற்று வணங்கிக்கொள்கின்றேன். விழாவிற்கு எவரெவரெல்லாம் வந்திருக்கின்றீர்கள் என்று என்னால் பார்க்க முடியவில்லை. எவரெவரெல்லாம் உரையாற்றப்போகின்றீர்கள் என்றும் என்னால் ஊகிக்கமுடியவில்லை. மண்டபம் நிரம்பியுள்ளதோ? ஒரு மூலையில் கொஞ்சப்பேர் கூடியுள்ளீர்களோ என்று என்னால் அனுமானிக்கமுடியவில்லை. எனினும் விழா சிறப்புற நடக்குமென்ற நம்பிக்கையில் இருக்கின்றேன். நான் பக்தியில் முதிர்ந்த பரவசக்காரனல்ல. ஞானப் பழமுமல்ல. உளவாரப்பணியாற்ற நான் நாவுக்கரசனுமல்ல. சிறுத்தொண்டராகவோ, கண்ணப்பராகவோ இருக்கக்கூட நான் தகுதியற்றவன். மாறாக நான் மிக சாதாரண கவிஞன் மட்டுமே. நீண்டபெரும் தொடரியாகநீளும் தமிழ்க்கவி பாரம்பரியத்தில் நான் சிறு அலகு மட்டுமே. எனக்கு என் ஸ்தானம் தெரியும். எனக்கு என் தகைமை புரியும். எனக்கு என்னையே அளவிடும் அளவு தெரியும். பக்திக் கவிஞன் என்று என்னையாரும் அடையாளப்படுத்திவிடாதீர்கள். நான் இன்றும் சின்னச்சின்ன குணங்கள் நிறைந்த சிறுவனாகவே என்னை வகைப்படுத்தியிருக்கின்றேன். நல்ல மனிதனாக வாழவேண்டும் என்ற நினைவுடன் நகருகின்றேனேதவிர அந்த இடத்தை அடைந்துவிட்டவனல்ல. போராடும் எம் தேசத்தில் நிலையெடுத்தபடி ஆயிரமாயிரம் கலைஞர்களும், கவிஞர்களும் தாயகத்தில் நிமிர்ந்து நிற்கின்றனர். அவர்களில் ஒருவனாக நானும் இருக்கின்றேன் என்ற தகுதியைத்தவிர என்னிடம் வேறு எதுவுமே கிடையாது. இந்தளவேதான் நான். இது எனது ஏழாவது பக்திப்பாடல் இறுவெட்டாகும். இன்னும் ஓரிரண்டு வரலாம். பின்னர் இந்தவழியிலிருந்து நான் வேறொரு புள்ளிக்குப் போகலாம். எனக்கு அது தெரியாது. ஏனெனில் எதுவும் தீர்மானித்தபடி நிகழ்வதில்லை. நிகழ்வதிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
நான் இதுவரை கடவுளிடம் எனக்கென எதுவும் கேட்டதில்லை. கேட்டாலும் அது தராது என்று எனக்குத் தெரியும். எந்தக் கோவில் வாசலிலும் ஏறி நான் அது தருகிறேன், நீ இது தருகிறாயா? என்று சாமியிடம் பேரம்பேசியதும் கிடையாது. என் மன ஆறுதலுக்காகவும்
|
|
 |