Home άber uns Kontact Φffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 

சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

 முதற் சங்கத் தமிழ்-(ஈனன்னை žர்பியம்)

முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.  

ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரீகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று நமது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. 'சுமேரு' எனும் சொல் 'குமரி' என்றும் 'கவுரி' என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் பழந்தமிழே அது என்று நன்றாகவும் தெரிய அதுவே தமிழிலக்கியங்கள் பகரும் குமரி நாடென்றும், ஆக சுமேருவே முதற்சங்கத் தமிழ் என்றும் தெரிகிறது. அதற்கு முன்பும் தென்கழக்காசியப் பகுதியிலிருந்து அவர்கள் வந்திருக்கலாம். மலாய் மொழியோடு கூடிய ஒற்றுமைக் கூறுகள் இவ்வாறு நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இப்பொழுது அம்மொழியில் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய இப்பாடலாகும். கொற்றவையே இங்கு 'ஈனன்னா' எனப்படுகின்றார். மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை žர்பியம்' எனப்படுகின்றது. அறிஞர்களால் வேண்டப்படும் விரிவான ஆய்வுக்குறிப்புக்களைத் தராது சைவ அன்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இப்பாட்டு மிகவும் எளிமையாகத் தரப்படுகின்றது.

இதன் காலம் எறக்குறைய கி.மு. 2000 அல்லது அதற்குச் சிறிது முன்பாக இருக்கலாம். மூலத்தில் யகர வகர எழுத்துக்களும் குறில் நெடில் வேறுபாடுகளும் இன்னும் பல தெளிவுகளும் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு தோன்றா முன்னும் திராவிட மொழிகள் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்று பிரிந்து செல்லா முன்பும் இருந்த மூலநிலை இங்கு. மேலும் இம்மொழி தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மலாய் போன்ற மொழிகளோடு தொடர்புடையதாகவும் விளங்குகின்றது. மூலத்தைப் புரிந்து கொண்டு மகிழ குறிப்புரைகள் பொழிப்புரைகள் போன்றவற்றை சுருக்கமாகத் தந்துள்ளோம். கண்டு மகிழ்க.

1. நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய
(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை; சர்ர > சர்வ : அனைத்தும் மெய்: சக்தி)

2. மை ஜ“ மேளம் கோரு காங்க வான் ஊரஸ்ய
(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன். மேளம் - மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை; காங்க > காம : விரும்பும்)

3. நுங்கை ஆண்ண சூஹ் கெஷ்ட்ட கள்கள்ள
(ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள். நுங்கை > நங்கை. சூஹ்கெஷ்ட்ட : சிகை கட்டு; சிரசில் அணியப்படுபவை, கட்டப்படுபவை. கள் : கணம் - பெரிய; கள்கள்ள : மிகப்பெரிய, உயர்ந்த)

4. அங்க ஜித்தே காங்க நாஅம் ஏண்ண தகும்ம
(மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள். ஜித்தே > žத்தே; பொய்யற்ற. ஏண் > வேண் > வேள் : உயர்ந்த தெய்வ பதம். ஏண்ணநம் இங்கு இடம் மாறி நிற்கின்றது .நாஅம் > நலம், நயம் : மெய்மை, நந்நயம்)

5. மெய் இமின்பே சூ(ர்) சட்டுக
(ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; இமின் : ஏழு, சூ(ர்) > கூர் > கரம் : கை. சட்டுக : சட்டல் அணிதல் பற்றுதல், காண்க : சட்டை; அணிவது)

6. நின்மோ மெய்கள்கள்ள சாங்கெஷ்ட்டுபி ஜாயேமன்
(என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான். மோ : என்; சாங் : சென்னி கெஷ்ட்டு : கட்டு ஜா : நீ)

7. மெய் மோ இயல் மெய் சூர்ஜூசே மோ இழை
(அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்: மோ : இங்கு நீ; சே : 'கே' எனும் வேற்றுமை உருபு; இழை : அணிதல்)

8. மெய் மோ ஓர் மெய் கபஜூ வீதைப்பு
(மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய். ஓர் : ஒன்றாக திரட்டல் ; கப : கவம், நெஞ்சு. தைப்பு : தைத்தல், பிணித்தல் வீ: வை, மெய்யாக)

விளக்கவுரை : "ஏண்உடுஅன்னா" என்றால் தெய்வபதம் பொருந்திய விண்மீன் என்று மிகப் பழந்தமிழில் பொருள்படும். இந்த அழகிய பெயருடைய இவ்வம்மையார் சார்கோன் என்ற பேரரசனின் திருப்புதல்வியுமாவார். உலக மெய்யறிவு வரலாற்றில் இவ்வளவு பண்டைய காலத்திலேயே (கி.மு. 2200 வாக்கில்) பண் நயமிக்க இவ்வழகிய பாட்டில் ஆழமான தத்துவக் கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளார். பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றனர். "நின் மெய் சர்வ" என்பது உலகத்தில் உள்ள அனைத்திற்கும் தலைவி என்றும் அன்னை என்றும் பொருள்பட, இங்கு புவனாம்பிகையாகவே போற்றப்படுகின்றார். மேலும் அவளது தற்சொரூபத்தை விளக்கப்புகுகையில் அவள் ஒளியே வடிவான பராபரையென்றும் பேரொளியே தனது ஆடையாக கோர்த்துக்கொண்டிருப்பவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனால் இந்த அம்மையார் பராபரை தரிசினம் பெற்றவராக விளங்குவதைக் கண்டு நம் உளம் பூரிக்கின்றது. மேலும் ஒளி வடிவாகிய இவ்வம்மை அழகிய உமையம்மையாக எழுந்தளுகின்றார் என்பதோடு அண்ணலாகிய சிவபெருமானின் ஒருபாதியாகிய, அவனது நங்கையாகவும் நிற்கின்றார் என்பதிலிருந்து அம்மையப்பர் வழிபாடு எவ்வளவு பழமையானது என்றும் புலனாகின்றது. அழகிய அணிகலன்களைப் பூண்டவள், குறையில்லா அங்கங்களை உறுப்புக்களை கொண்ட இவ்வுமையம்மை தத்துவங்களாகிய மெய்களையே, அவற்றில் சிறப்பானவற்றை தனது அணிகலன்களாகப் பூண்டு நிற்கின்றாள் என்னும் வர்ணனை இந்த உலகையே தனது உடம்பாக கொண்டும் நிற்கின்றாள் என்று பொருள்படும். "மெய்" என்பதற்கு சத்தி அல்லது ஆற்றல் என்று பொருளும் உண்டு. "மொய்" அல்லது "மொய்ம்பு" என்றும் வழங்கும். இத்தகைய சக்திகளை எல்லாம் தன்பால் திரட்டி தனது வளையல்களாக கிரீடங்களாக பிற அணிகலன்களாகப் பூண்டு சுடர்கின்றாளாம்.

மேலும் "காங்க வான் ஊரஸ்ய" என்னும் சொல்லை வானில் உலகில் உள்ள அனைவராலும் விரும்பப் படுகின்றவள் என்பதோடு, எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கும் காமவேட்கையின் தோற்றுவாயும் இவளே எனவும் படும். இதனையே தனது கருவியாகக் கொண்டு ஆணாகப் பெண்ணாக பிறக்கும் எல்லா உயிர்கள் பாலும் இவ்விச்சையைத் தோற்றுவித்து அதன்வழி ஆன்மாக்களை ஆட்சி செய்கின்றாள் என்றும் படும். இத்தகைய கருத்துக்களே பிற்காலத்தில் தாந்தீரீக நெறியின் அடிப்படையாக எழுந்ததோடு, தமிழ் மக்கள் அகவாழ்க்கையையே திறம்பட ஆய்வதற்கு வழி வகுத்தது என்றும் கூறலாம். இங்கு அம்மை காமாட்சியாக சிறப்பதைக் காண்க.

9. உசும்கள்ங’ன் கு(ன்)ற ஒளசு பாஇசி(ன்)
(பெரும் அரவமென நாட்டின் மேல் விசத்தை நிரப்புகின்றாய். உசும்கள் : உசும்பும் அரவம்; ங’ம், ங’ன் : "இன்" என்னும் வேற்றுமை உருபு, இங்கு 'போல' என்னும் கருத்து. கு(ன்)ற : நாடு, கூறு ஒளசு : விசம், பாஇசி(ன்) :நிரப்பல்; தருதல்; பாய்ச்சல்

10. இசைக்கோர் ங’ம் கீ(ழ்) žக்கிஜா எழினு இல பா ž ஞால்
(பெரிய இடியென என நாட்டை அழிப்பாய், செடிகள் அதனால் அந்நாட்டில் விளங்காதுபோம். இசைக்கோர் : கோர இசை, இடி; கீ : கு, கீழ் என்பதின் மூலம்; இடம் நிலம். žக்கி : žக்கல், அழித்தல், எழினு : எழுவது - தாவரங்கள். ஞால் : விளங்குவது. பா : தருதல் ž : அங்கு, அவ்விடம். ž —> கீ—>கு : இடம்)

11. அமரு கு(ன்)று பீத்து இழித்தே
(குன்றிலிருந்து விழும் அருவி நீ : அமரு : அமுரி, பெரும் வெள்ளத்து அருவி; இழி: விழல்)

12. சாங்கள் வான்கீழ்-அ ஈன்னன்னாபி மன்
(பெருமைக்குரியவள் தலைவி, வானிலும் மண்ணிலும் இருக்கும் அனைத்தையும் ஈனும் அம்மை நீயே ; சாங்கள் > தாங்கள் : உயர்ந்தவள்; ஈனன்னை : புவனாம்பிகை)

13. இஜினே நிரை(ய) களம்ம செங்குவ
(நெருப்பை நிரை நிரையாக நாட்டின்மேல் கொட்டுபவள். இஜி > இசி : நெருப்பு. நிரைய : திரளாக. களம் : நாடு. செங்கு : ஆறென ஓடுவித்தல், செங்கை > கெங்கை. மலாய் : சுங்கை : ஆறு)

14. ஆண்ணே மெய் žயிம்ம நின் ஓரிய ஓவுவ
(இறைவனாகிய ஆண்ணால் மெய்யாகிய சத்தி தரப்பட்டவள்; கடுஞ்சின அரிமாவை ஊர்பவள். ž : ஈ, தருதல், ஓரி : அரிமா, சிங்கம். ஓவு : செலுத்தல், ஓச்சுதல்)

15. எனம்கோ ஆண்ணத்து எனம் தூது
(ஆண்டவனின் தெய்வீக சொற்களுக்கு இணங்கவே தான் செயல்படுகின்றவன்ள் எனம் : சொற்கள்; 'என' என்பதிலிருந்து வந்த பெயர்ச்சொல்; தூது : சொல்லல், அல்லது செயற்படல்; கோ : தெய்வீக)

16. பில்லுத கள்கள்ள நிகசு யாப முன் சூழ்?
(பெரும்பெரும் கிரியைகளின் நாயகி; நினது உண்மைகளை யார்தான் அறிவார்? : பில்லுதம் : பில்லி : இங்கு கிரியைகள்; நிகசு : நிசம்; பொருள். சூ(ழ்) : அறிதல், சொல்லல், உணர்தல்)

விளக்கவுரை : இப்பாடல் அம்மை கொற்றவையாக உருவெடுத்து எவ்வாறு வேண்டாதவற்றை அழித்து இல்லாது போக்குகின்றாள் என்பதை விளக்குகின்றது. கடுவிசப் பாம்பென உலகில் விசத்தைக் கொட்டி நெஞ்சுவலிக்கும் மனநோய்கட்கும் மரணத்திற்கும் காரணமாகின்றாள். இடியென முழங்கி புயலையும் வெள்ளத்தையும் கொண்டு வந்து பொல்லாதவர்களை அழிக்கின்றாள். இதன் வழியாக அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் சக்தியாக இவளே விளங்குகின்றாள். ஆயினும் சாங்கீயத்திற்கு வேறாகவும் சைவத்திற்கு ஒத்து வரும் வகையிலும் ஒர் கருத்து வரி 14-இல் இருக்கின்றது. அண்ணலாகிய சிவபெருமானே இவருக்கு இச்சக்திகளைத் தருகின்றாராம். அண்ணலாலேயே சக்திகளைப் பெறுவதே அவளது தனிச்சிறப்பாம். மேலும் நாதமாகிய அண்ணல் செலுத்தும் வகையிலே விந்துவாகிய அம்மை அனைத்தும் செய்கின்றாள், தற்பரத்துவம் சிவனுக்கே அமைவதாகவும் குறிக்கப்படுவது இங்கு சாங்கியத்திற்கு வேறாகிய சித்தாந்த சைவமே சுட்டப்படுகின்றது என்று கொள்ளலாம்.

பஞ்சகிருத்தியக் கொள்கையின் தோற்றுவாயையும் இங்கே காணலாம். நாடெங்கும் நெருப்பை நிரைய வீசி அனைத்தையும் சுட்டெரிக்கும் தொழில் சங்காரமாகின்றது. குன்றிலிருந்து விழும் அமருவாக, அமிர்தமாக திகழ்வது அவளது படைப்புத் தொழிலாகும். இவ்விரண்டும் இருக்க, திதியும் ஆங்கு அமைகின்றது. நாதனாக அண்ணல் அறிவு புகட்டுவது, அதன்படியே அம்மை செயல்படுவது மறைத்தலையும் அருளலையும் சட்டுகின்றது.

17. குறு கொல் கொல் ஊத்தே ஆல் பாஇசின்
(நாடுகளை கொல்பவள், வளியினால் ஆற்றல் தரப்பட்டவள். ஊ: ஊதுவது, காற்று. ஆல் : இங்கு ஆற்றல் பா: தருதல்)

18. காங்க ஏண்லீல்ல களம்ம இம்மினி தள்
(வளியோனின் அன்பிற்குரியவள், நாட்டில் பறந்து திரிபவள் : லீல் : லீல்லை, அலைதல்: இங்கு காற்று. ஏண்லீல் : வளியாய் விளங்கும் தெய்வம். தள்ளிம்மினி என்பது இம்மினி தள்' என்று நிற்கின்றது. தள் : பறத்தல், அலைதல்)

19. ஆக்ஞா ஆண்ணக்கே பா குப்பு யென்
(ஆண்டவனின் ஆணைக்கு அடிபணிந்து நிற்பவள். ஆக்ஞா : ஆணை; குப்பு : குந்தல், குவிந்து நிற்றல்; “என்” : உயர்திணை இடைச்சொல்)

20. நின்மோ ஜபம்ஜூசே குறு ஈ குறும்குறும்மே
(என் அம்மையே, நீ செபிக்கின்றபோது நாடெல்லாம் குறுகிக் குறுகி அடங்கும். ஜபம் : செபம், இங்கு சப்தம்; குறும்குறும்மே : குறுகிக்குறுகி அடிபணியும்)

21. நிக மேளம் உன்னிட(ம்) நாஅம்உளூஉளு

22. நோய் மெய் கார் ஊசுபி ஓ மோரே கெண்

23. மெய்த்து மெய் உஸ்பி சூர் பாயிரே வதி

(மிகவும் பிரகாசமாகச் சுடரும் உன்னிடம், மக்கள் அச்சத்தோடு நடுங்கியவாறு உன்முன் வரும்போது, அவர்கட்கு உரிய வினைப்பயன்களை நியதி பிழையாது தருவாய். நாஅம் உளுஉளு : ஆள்ஆள் எனவரும் மக்கள். நோய் : இங்கு அச்சம். மெய் கார் : உடம்பில் நிற்க, மோரே : மார்; அவர்கள், கெண் :செல்லல், மெய்த்து : உண்மையான, நியதி பிழையாத. சூர் வதி : கையில் திகழச் செய்தல் ; பாயிரே : அவர்கள். ஊசு : ஊசலாடுதல், நடுங்கல். உஸ்ஸ : பொருந்திய, தகுந்த. உஸ்ஸ > உகந்த, ஓ : உண்டாய், மெய்யென என்பதைக் குறிப்பது)

24. இழு ஈரக்கே ஞால மான்ற ஆப் சேர்
(கண்­ர் விழ அழுதவாறு உன்முன் சேர்கின்றனர். இழு —> அழு : அழுதல். ஈர : கண்­ர் விடல். ஞால : நிலவ மா(ன்) ற : உன்னிடம்; ஆப், அப் —> அவ், அவர்கள்.

25. இல் அந்நீர் கள்கள்ள žலைப மோயிரே கெண்
(பெரிய அழுகை இல்லத்தின் சாலை வழியே உன்னை நோக்கி வருகின்றனர்; அந்நீர் : மிகுந்த நீர்; பேரவலம். žலை > சாலை.

விளக்கவுரை : இப்பாடல் அம்மையே சத்தி என்பதை விரிக்கின்றது. 'ஊ' என்பது இங்கு வளி. அனைத்தையும் அசைக்கும் வளியே இங்கு சத்தியின் வடிவமாகக் கொளப்படுகிறது. நாடுகளை அழிக்க பெரும் பெரும் சத்திகளை இந்த வளியின் வழி பெற்றிருக்கின்றாளாம், அந்த வளிதேவனால் பெரிதும் விரும்பப்படும் மங்கையும் இவளாம். ஆயினும் தற்பரனாகிய அண்ணலது ஆணைக்கே அடங்கியவள்; நாதமாக சிவன் நின்று செலுத்துவே சத்தியாகிய அம்மை அனைத்தையும் செய்கின்றாளாம்.

இந்த பாடலில் ஜபம் என்ற சொல் வருகின்றது. உலகத்தில் எங்கெங்கு ஓசைகள் எழுகின்றதோ அவையெலாம் அம்மையின் செபமாகப் படுகின்றது. இடி போன்ற இவள் செபத்தைக் கண்டு உயிரினங்கள் அஞ்சி குறுகுமாம்; தற்செருக்கறுத்து அடங்குமாம்.

பொல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள் நடுங்கும் உடலோடு இவள் முன்னே வர, அம்மையே அவ்வவர் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப வினைப்பயன்களை தந்தருளுவாளாம். இக்கருத்தைக் காண சைவசமயத்தின் கன்மக் கோட்பாட்டின் தோற்றத்தையும் இங்கு காண்கின்றோம். 'Hus' என்றே வாசிக்கப்படும் சொல் தமிழில் 'ஊசு', உசு > உக என்றும் வருகின்றது. ஊசு > ஊசல் : நடுங்குதல். 'நோய் மெய் கால்' என்பதிலுள்ள 'மெய்' உடம்பாகும். 'மெய்த்த மெய் உஸ்பி' என்பதில் மெய், சரியான தவறற்ற உண்மையான என்றெல்லாம் பொருள் படும்.

26. இமி மெய்த்த நிக மா(ன்)றத்த žக்க
(போரின் கண் அனைத்தும் உன்னால் அழிக்கப்படுகின்றன. மெய் : போர், காண்க மெய்கீர்த்தி : போர் வென்றி. žக்கல் : அழித்தல். இமி > இமை, கண்)

27. நின்மோ ஆல் நீயஜா KA KA ஈ துருத்தே
(என் அம்மையே உனது ஆற்றலாலேயே அனைத்தையும் நீ குறைக்கின்றாய்.
ஆல் : ஆற்றல், சக்தி, துருத்தே : தூர்த்தல், பழையதாக்கி அழித்தல்.)

28. ஊ தூத்து ங’ம் ஈ தூத்துயிடே
(புயல் தூற்றி நாட்டை அழிப்பதுபோல் நீயும் அழிக்கின்றாய்.
ஊ : ஊதை, காற்று. தூத்து - பலமாக வீசல் ,தூற்றல்)

29. ஊ கூ அறை அறையத்த கூஉ இயந்து ஆப் அறை அறை
(கூவென சப்தமிடும் காற்றொடு நீயும் இணைந்து சப்திக்கின்றாய்.
அறையறை : அரவாரமெனினும் ஒக்கும். இயந்து : இணைந்து)

30. இசைக்கோருட žங்கு முந்த மீண்மீண்
(கோர இடியொடு இணைந்து விடாது தொடர்ந்து நீயும் கர்ஜிக்கின்றாய்.
žங்கு : சிங்கம் : கர்ஜிப்பது. மீண்மீண்: மீண்டும் மீண்டும்.)

31. இயல் ஒல் இயல் ஒல்லொடு இயத்த கோசியிடே
இயங்கு காற்றோடு கூடி நீயும் சப்திக்கின்றாய் , இயம் : இயங்குவது, காற்று. ஒல் “ நல்லதல்லாத. கோசி : கோசம், பெரும் சப்தம். )

32. கீர்ஜா நா குசுவு ஈஇன்žன்
(நினது கால்கள் நிலைப்படுதலின்மையின் நிறைந்திருக்கின்றது - யாண்டும் ஆடிக்கொண்டே இருக்கின்றது.
கீர் : கொடியென வளர்தல் கீரை : இவ்வாறு வளர்ந்தது. கீரி : விரல்கள், அதனை உடைய குதிக்கால். குசுவு : குன்றல், குத்தி நிற்றல். நாகுசுவு : குத்தி நிற்றல் இல்லாமை, யாண்டும் அசைந்து கொண்டே இருப்பது. நா: அன்மை உருபு . சி, சின்,žன்: நிறைதல். சி > சில் > சூல் : கருப்பத்தில் வயிறு குண்டாகத் திரண்டிருத்தல். ž.> žர்,žன்: நிறைவு)
33. பலகை அந்நீராடு அழு முந்த அபையே
(இழவு இசையொடு நீயும் அழுகையை அனைவரும் காணச் செய்கின்றாய்.
பலகை : இசைக்கருவி மலாய் : பாலாங் : குழாய். அபையே : சப்தமிடல், பேசுதல், சொல்லல்.)

விளக்கவுரை : இங்கு சாங்கீயம் சாற்றும் பிரகிருதி மாயையின் தோற்றத்தையும் வாசியோகத்தின் தொடக்கத்தையும் காண்கின்றோம். வரி 32-இல் வருவது நடராச வடிவில் எடுத்தபாத கருத்தை காண்பிப்பதாகும். இங்கு கீரி என்பது விரல்களை உடைய பாதம் எனப்படும். “கீர்” கோடென நீண்டிருப்பது, கொடியென படர்ந்திருப்பது. “கீரை” என்ற சொல்லும் கீறி எழுதுவோனாகிய கீரன் என்ற பழந்தமிழ் சொல்லும் இதனடியாக பிறந்திருக்கலாம். அம்மையின் பாதங்கள் குத்தி நிற்காது என்று இயங்கிக்கொண்டே, அசைந்து கொண்டே இருக்கும் பாதங்களாம். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்து அசையாது நிற்கும் குத்திய பாதங்கள் அப்பனுக்குரித்தாகிய பிறகு இரண்டு கலந்துவிட, இரண்டு வகை பாதங்களையும் உடைய நடராச மூர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. என்றும் இயங்கிக்கொண்டே இருக்கும் அம்மையை பிற்காலத்து சாங்கீயர் பிரகிருதி மாயை என்றனர். 'சாங்கீயம்' என்ற சொல், உயர்ந்தது என்ற கருத்துடைய இச்சொல் சுமேருத்தமிழ் சொல்லாகும்.

மேலும் வரிகள் 29 -31 வாசியோகத்தில் தோற்றுவாயைக் காட்டுகின்றன. அசைகின்ற காற்றோடு, மூச்சோடு அசைகின்றவள், இலங்குகின்றவள், இயங்குகின்றவள் அம்மையே. அவளது சத்தி இயங்கிக்கொண்டே இருக்கும் காற்றோடு இணைத்து காணப்படுகின்றது. உடம்பில் உயிர் மூச்சும் காற்றின் உட்சுவாசம் நிட்சுவாசங்களே. சத்தி இவ்வடிவில் உடலில் இருக்கின்றது என்ற உணர்வு தலைப்பட, அதனை ஈட்டும் முகத்தானே வாசியோகம் வந்திருக்க வேண்டும். இந்த வாசியோகத்தை பெரிதும் வளர்த்த சித்தர் மரபினர் வாலைப்பெண் வழிபாட்டினர் என்பது இங்கே கருதத் தக்கது.


(v)
34. நின்மோ ஆனுன்னா திங்கிர் கள்கள் இனம்
35. சூதின் மூசன் தள்ளு ங’ம் கோடுத்தே மோவே ž பறவிசு

(என் அன்னையே, ஆனுலக தேவர்கள், வெளவால்கள் பறந்து செல்வதைப் போல் விடரிடை பறந்து செல்கின்றனர்.
ஆனுன்னா : வானுலக வாசிகளாகிய தேவதேவியர்கள். திங்கிர் > திவ்வர் > தேவர்.
மூசன் : மூசு, முசன் : மூக்கு நீண்ட உயிரினங்கள். சூதின் மூசன் : வெளவால்கள். தோ, தொடு : மலை, ž : அங்கு எனும் இடச்சுட்டு)

36. இமி உஷ்(ண)ஜா இல பா சுங்கீயிசு
(உனது கனல் தெரிக்கும் கண்கள் முன், அவர்கள் நடப்பதில்லை உஷ்-சு —> உஷ்ண : கடுங்கனல் சுங்கீசு : படர்தல், மலாய் : சுங்கை, ஆறென பெயரல் பா—> வ : அவர்கள்

37. சாங்கி உஷ்ண ஜா சாங்கி நா முன்னிடு ஞால்ஞால்
(உனது கடுஞ்சின சென்னி முன் அவர்கள் நிற்பதில்லை.
சாங்கி —> சென்னி, ஞால், கால் : நிற்றல், திகழ்தல்)

38. சாஅய் எவ்வ ஜா யாப ஈ தண்தண்
(உனது கடுஞ்சின நெஞ்சினை யார் தான் தணிப்பர்?
சாஅய் > தாய்: உள்ளம், மலாய்: சாயா: நான் இப்ப > எவ்வம் : கடுஞ்சினம் ஈ தண்தண் : குளிர்மை ஈதல் )

38. சாஅய் ஒல்கள்ள ஜா தணித்தபி மாஅ
(உனது கொடூர உள்ளத்தை தணிப்பது முடியாதவொன்று.
ஒல் : கொல்திறத்து உள்ளம். மாஅ : மகா - முடியாத அளவிற்கு பெருத்திருப்பது)

40. நின் ஊரு ஈ சாய் நின் சாய் ஈ உவல்
(தொடைகளை மகிழ்விக்கும் அம்மையே நெஞ்சு குதூகலிக்கச் செய்யும் சத்தி நீயே.
ஊரு : தொடைகள், உவல் : உவகை, மகிழ்ச்சி சாய் : சாய வைத்தல், அமைதி அடையச் செய்தல்.

41. எவ்வம் நூதண்தண் தமுகள் சோமன்ன
(சோமனின் மூத்த புதல்வியே, உனது சினத்தை தணித்தல் சாலாது.
துமு - தமு : புதல்வன், புதல்வி தமுகள் : மூத்தவள்).

42. நின் குன்ற திரிக யாப கீழ்செய் பண்ணு தூம்மு
(எல்லா நாடுகளின் தலைவி, உனக்கு யார்தான் அடிபணிய மறுப்பர்?
கீழ்சா > கீழ்செய் அடிபணிதல். தூஉம் : தூம்பு > துப்பு : விட்டுவிலகல். திரிக : மேன்மையுறல்.)

விளக்கவுரை : இங்கு அம்மை காமாட்சியாக வெளிப்படுவதைக் காண முடிகின்றது. எல்லா தெய்வங்கட்கும் தெய்வமாக இருக்கின்ற அம்மை, யாவராலும் தணிக்க முடியாத கடுஞ்சினத்தவளாக, உருத்திரியாக இருக்கின்ற அதே அம்மை விந்துவின் தெய்வமான சோமனின் மூத்த புதல்வியுமாகும். இவளே எல்லா உயிரினங்களும் பற்பல இன்னல்கட்கு ஆளாகி வெறுப்புற்று தற்கொலை எண்ணத்தோடு திரிகின்றபோதிலும் காமவின்பம் என்னும் ஒன்றைத் தந்து களிப்பூட்டி, நெஞ்சம் மகிழுமாறு செய்து உவகை பிறப்பித்து மீண்டும் உற்சாகத்தோடு உழைக்குமாறு அருள் பாலிக்கின்றாள். இதனால் காமவின்பத்தை ஆட்சி செய்யும் காமாட்சியாக அம்மை இங்கு கொளப்படுகின்றாள் என்பது தெளிவு.

இதனாலேயே எல்லா நாட்டிற்கும் தலைவியாக இவள் விளங்குகின்றாளாம். காமவின்பத்தை தேடித்திரியார் யாருமில்லை. அதனைக் கொடுப்பதும் மறுப்பதுமாகிய சத்தியை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கின்ற அத்திறத்தால் அவளுக்கு அடிபணியாதார் யாருமே இல்லை என்றவாறு.

(இங்கு முதல் ஐந்து பாடல்களேத் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் விரும்பின் ஏனைய பாடல்களும் தரப்படும். இது தொடர்பாக ஆசிரியர்க்கு உடன் எழுதுங்கள்.)

Copyrights : Sivankovil.ch