Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 
சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 


மண்சுமந்த மேனியர்

தாயகத்தில் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தமது உறவுகளை, உடமைகளை, அங்கங்ளை இழந்து அகதி முகாம்களில் தவிக்கும் எமது உறவுகளின் இன்னல்களை விபரிக்க வார்த்தைகள் இல்லை.
 சைவத் தமிழ்ச் சங்கமும் அன்றில் இருந்து இன்று வரை தாயகத்தில் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு  உதவும் பணிகளை செவ்வனே செய்து வருகின்றது. இறுதியாக நடந்தேறிய கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மணற்காடு முகாமில் தங்கி இருக்கின்ற  60 மாணவச்செல்வங்களுக்கு முதற்கட்டமாக கற்கை செயற்பாடுகளுக்கு 20.03.2010 முதல் உதவ முன்வந்துள்ளோம்.
 அந்த வகையில் 20.03.2010 மணற்காடு முகாமில் நேசக்கரங்களின் இணைப்பாளர் கமலாதேவி சதசிவம் அவர்களின் ஏற்பாட்டில், அதிபர் இராஜதுரைசிங்கம் அவர்களின் தலைமையில் இவ்நிகழ்வு நடைபெற்றது. இவ்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மாணவர்ளும் முகாமில் உள்ள ஏனைய உறவுகளும் பங்குபற்றினார்கள்.
 குறிப்பிட்ட 60 மணவர்களுக்கும் முதற்கட்டமாக பாடசாலை சீருடையும், சப்பாத்தும் வழங்கப்பட்டது. மேற்கொண்டு அவர்களுக்கான கற்கை தேவைகளை மாத மாதம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவ் ஏற்பாட்டை ஒழுங்கு படுத்திய நேசக்கரங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

 

 ""பிள்ளைகளின் குரல் ஒலிவடிவில்""

 

 மண்சுமந்தமேனியச் செல்வங்களின் படங்களுக்கு (புதிய இணைப்பு 18.04.2010)


'கற்கை நன்றே, கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
'கொடிது கொடிது இளமையில் வறுமை"
 




Copyrights : Sivankovil.ch