Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 
சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க பிரார்த்தனை

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரிற்கு 20.03.2010 சனிக்கிழமைமாலை வருகைதந்து பிராத்தனையை முன்னின்று நடாத்தினார்.

பஜனை, வாழும்கலை அறிமுகம், தாயக உறவுகளுக்கு குருஜி அவர்கள் ஆற்றிவரும் சமூகப்பணி, ஆன்மீகப் பணி போன்றவற்றை எடுத்துக்காட்டும் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நடைபெற்ற அரங்கிற்கு சூரிச் சிவன் ஆலயத்தை தரிசித்து வருகைதந்த குருஜி அவர்களை பூரணகும்ப மரியாதையுடன் மக்கள் அழைத்துவந்தனர்.

மண்டபம் நிறைந்த மக்கள் ஆர்வத்துடனும்,  உற்சாகத்துடனும் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் சுவாமியின் அரவனைப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஈழத்தில் நடந்த இன்னல்கள்கண்டு உலக அரங்கில் தமிழினத்தின் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை தெரியப்படுத்திவரும் சுவாமி தனது உரையின்போது ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தமது நிறுவனம் முழுமையாக பாடுபடும் என்றும் தமிழீழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமது அமைப்பு அதற்கான சேவைத்திட்டங்களை விஸ்தரித்துள்ளதாகவும் தெரியப்படுத்தினார். 

 

படங்களுக்கு

மேலதிக படங்கள் மிகவிரைவில்
 

Copyrights : Sivankovil.ch